×

3-வது முறையாக கூட்டணி அமைக்கும் கமல்ஹாசன் - ஏ.ஆர்.ரஹ்மான்

கமல்ஹாசன் இப்போது நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. ஷங்கர் இயக்கும் இந்த படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே தவிர்க்க முடியாத சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் எழுதி, நடித்து, இயக்க இருக்கும் ஒரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘தலைவன் இருக்கிறான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனமும், ‘லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

அந்த அறிவிப்பில் ‘தலைவன் இருக்கிறான்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார் என்ற தகவலையும் பகிர்ந்துள்ளனர். ஏற்கெனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’, ‘தெனாலி’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைந்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து ‘தலைவன் இருக்கிறான்’ படத்தின் மூலம் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறார்கள்.

Tags :
× RELATED சிறகன் விமர்சனம்