×

பத்திரிகையாளர் சங்கத்துக்கு கங்கனா நோட்டீஸ்

சமீபத்தில் மீடியா சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் கங்கனா ரனவத். அப்போது தான் நடித்த மணிகர்னிகா படத்தை பத்திரிகையில் விமர்சித்திருந்த செய்தியாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கங்கனா. பிறகு மீடியாவினரை தரக்குறைவாகவும் விமர்சித்தார். இதையடுத்து பொழுதுபோக்கு பத்திரிகையாளர் சங்கம், கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரியது.

அதுவரை அவரது படங்களை பற்றிய செய்தியும் அவரை பற்றிய செய்திகளையும் வெளியிடாமல் புறக்கணிக்கப்போவதாக சங்கம் அறிவித்தது. கங்கனாவின் கருத்துக்கு இந்திய பிரஸ் கிளப்பும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் தன் மீதான தடையை நீக்க வேண்டும் என பொழுதுபோக்கு பத்திரிகையாளர் சங்கத்துக்கு வக்கீல் நோட்டீசை கங்கனா அனுப்பியுள்ளார். கங்கனா - மீடியா மோதல், பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...