×

அரை நிர்வாண காட்சியில் ஹீரோயின்

ராதிகா ஆப்தே பெயரை கூகுலில் பதிவு செய்தால் உடனே அவர் நடித்த கவர்ச்சி படங்களின் வீடியோக்கள் வரிசை கட்டிநிற்கின்றன. தற்போது ஹாலிவுட் நடிகருடன் அவர் நடித்துள்ள அரை நிர்வாண பெட்ரூம் காட்சி புகைப்படங்களாக வெளியாகி இன்டர்நெட்டை சூடாக்கியிருக்கிறது. ஸ்லம்டாக் மில்லியனர் பட ஹீரோ தேவ் பட்டேலுடன் தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே. அந்த படத்தின் காட்சிகள்தான் வெளியாகி இருக்கிறது.

படுக்கையில் தேவ்வுடன் அரை நிர்வாண தோற்றத்தில் ராதிகா ஆப்தே கட்டிப்பிடித்து சரசம் செய்வதும் அவருடன் லிப் டு லிப் கிஸ் அடித்து கிரங்க வைப்பதுமான படங்கள் பரபரத்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி ஒன்றில், ‘இந்த காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற பார்முளாவெல்லாம் சரிவராது’ என்று தடாலடி பேட்டி தந்தார். அதன்பிறகு இப்படியொரு புகைப்படம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!