டாப்ஸி மீது நடிகை தங்கை அட்டாக்

கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்றிருக்கும் டாப்ஸி வித்தியாசமான வேடங்களில் நடித்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் டாப்ஸியை நடிகை கங்கனாவின் தங்கை ரங்கோலி வெளுத்து வாங்கியிருக்கிறார். ‘நடிகை டாப்ஸி எனது கங்கனா ரனாவத் நடிப்பை அப்படியே காப்பியடித்து அவரைப் போலவே நடிக்கிறார். டாப்ஸிக்கு பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் கங்கனாவைவிட குறைந்த அளவே சம்பளம் வாங்குகிறார்.

அத்துடன் கங்கனாவை அச்சு அசலாக மிமிக்ரி செய்கிறார். இதில் டாப்ஸியின் ஒரிஜினாலிட்டி எதுவும் இல்லை’ என பகிரங்கமாக திட்டி தீர்த்திருக்கிறார் ரங்கோலி. சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த டாப்ஸி, கங்கனாவை பற்றி மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தாராம். அதைப்பார்த்து கோபம் அடைந்த கங்கனாவின் தங்கை ரங்கோலி நேரடியாக டாப்ஸியை தாக்கி பதிலடி தந்திருக்கிறார்.

Tags :
× RELATED இளம் நடிகருடன் நடிக்க துடிக்கும் ரகுல்