ரூ.16 கோடி பங்களா கண்ணுபட்டுபோச்சே...! தமன்னா புலம்பல்

கல்லடிபட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்று கிராமத்து பக்கம் பழமொழி சொல்வார்கள். தமன்னாவுக்கு தற்போது கண்ணடிபட்டிருக்கிறது. சமீபத்தில் மும்பை வெர்சோவா பகுதியில் தமன்னா, ரூ.16 கோடி செலவில் ஆடம்பர பங்களா வாங்கியிருக்கிறார் என்று தகவல் பரவியது. பீச் அருகே நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த வீடு கடற்கரை பார்த்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் ஒரு சதுர அடி விலையே 80 ஆயிரத்துக்கும் அதிகமாம். கடந்த ஒரு வாரமாக இதைப்பற்றித்தான் கோலிவுட்டில் பேச்சு ஓடிக்கொண்டிருகிறது.

தமன்னா எங்கு சென்றாலும் 16 கோடியில் வீடு வாங்கியிருக்கிறீங்களாமே என்று கேட்டு அவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்களாம். இதனால் தர்மசங்கடத்திற்குள்ளாகியிருக்கிறார். பங்களா வாங்கியது பற்றி தமன்னா கூறும்போது,’எனது இந்தி டீச்சர் என் செல்போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் ரூ.16 கோடிக்கு வீடு வாங்கியிருப்பதாக என்னைப்பற்றி தகவல் பரவிவருவதாக குறிப்பிட்டிருந்தார்.

ஒரு வீட்டுக்கு நான் எப்படி இரண்டு மடங்கு விலை தருவேன்? என்று அவருக்கு பதில் அளித்தேன். வெளியிடங்களுக்கு சென்றாலும் இதுபற்றியே என்னிடம் கேட்பதால் தர்மசங்கடமாக உள்ளது. நான் வீடு வாங்கியது உண்மைதான். ஆனால் அந்த வீட்டுக்கு இரண்டு மடங்கு விலை கொடுக்கவில்லை. வீடு ரெடியானதும் நானும் எனது பெற்றோரும் அந்த வீட்டில்தான் வாழப்போகிறோம். வீட்டை மிகவும் சிம்ப்ளாகவும், கலை நயத்துடனும் அமைத்து வருகிறேன்’ என்றார்.

Tags :
× RELATED இளம் நடிகருடன் நடிக்க துடிக்கும் ரகுல்