மீண்டும் நடிக்க வரும் ஹீரோ

எல்லாம் அவன் செயல், என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ், புலி வேஷம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த ஆர்.கே., அவன் இவன், ஜில்லா, அழகர் மலை போன்ற பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். அவர் நடித்த வைகை எக்ஸ்பிரஸ் வெளியாகி 2 வருடம் ஆன நிலையில் புதிய படம் எதிலும் நடிக்காமலிருக்கிறார்.

இதுபற்றி ஆர்கே கூறும்போது,’புதிய படம் தயாரித்து நடிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதுடன் கடந்த 2 வருடமாக வியாபாரத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். ஹேர் கலர் டை தயாரிப்பில் ஈடுபட்டு விரைவில் அதில் கின்னஸ் சாதனை செய்வதற்கான வேலை நடக்கிறது. பிற தொழிலில் சம்பாதிப்பதைத்தான் சினிமாவில் முதலீடு செய்கிறேன்.

படம் தயாரித்து எனது வீட்டைகூட விற்க வேண்டிய நிலைக்கு சென்றிருக்கிறேன். ஆனாலும் சினிமாதான் என்னை அடையாளம் காட்டியது. பிறதொழில் செய்யாத யாரும் சினிமா தயாரிப்பது கடினம். அடுத்து ரூ.100 கோடி செலவில் படம் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகிறேன்’ என்றார்.

Tags :
× RELATED இளம் நடிகருடன் நடிக்க துடிக்கும் ரகுல்