நடிகர்களுடன் கபடி ஆடிய வீரர்கள்

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் 2ம் பாகத்தை அதேபெயரில் செல்வசேகரன் இயக்குகிறார். இப்படத்துக்கும் சுசீந்திரன் மூலக்கதை அமைத்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ’வெண்ணிலா கபடி குழு படத்துக்கு வரவேற்பு கிடைத்த நிலையில் 2ம் பாகம் எப்போது வரும் என்று கேட்ட வண்ணமிருந்தனர். அதற்கான நேரம் வந்து விட்டது. 1987ம் ஆண்டில் கிராமங்களில் திருவிழாபோல் கபடி விளையாட்டு விமரிசையாக நடக்கும். அந்த நிகழ்வை அப்படியே இப்படம் கண்முன்கொண்டு வந்து நிறுத்தும்.

முதல்பாகத்தில் நடித்த பரோட்டா சூரி, அப்புக்குட்டி போன்றவர்கள் 2ம் பாகத்தில் நடித்திருப்பதுடன் விக்ராந்த் ஹீரோவாகவும், அர்த்தனா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். பூங்காவனம், ஆனந்த் தயாரிக்க அலெக்சாண்டர் வெளியிடுகிறார். செல்வகணேஷ் இசை. இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு. இப்படத்தில் நடிகர்களுடன் நிஜ கபடி வீரர்களும் நடித்திருப்பதுடன், இரவில் மின் விளக்கு அமைத்து போட்டிகளை படமாக்கியது ஹைலைட்டாக இருக்கும்’ என்றார்.

Tags :
× RELATED இளம் நடிகருடன் நடிக்க துடிக்கும் ரகுல்