லவ்வரா...! யார் அவர்? அனுபாமா அதகளம்

சாய்பல்லவி, அனுபாமா பரமேஸ்வரன் போன்றவர்கள் ஒரே நேரத்தில் திரையுலகிற்கு வந்தாலும் சாய் பல்லவி அளவுக்கு அனுபாமாவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. வந்த ஒருசில படங்களும் வெற்றியாக அமையவில்லை. இதனால் நடிப்புக்கு தற்காலிக முழுக்குபோட்டு இயக்குனர் ஆகும் முடிவு செய்தார். உதவி இயக்குனராகவும் இயக்குனர் ஒருவரிடம் சேர்ந்தார்.

கிணற்றில்போட்ட கல்லாக எந்தவித பரபரப்பும் இல்லாமலிருந்த அனுபாமா திடீரென்று தனக்கும் கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் தொடர்பு இருப்பதுபோல் ஒரு தகவலை இணைய தள பக்கத்தில் கிளப்பிவிட்டார். அது தீயாய் பற்றிக்கொண்டது.

இந்த பரபரப்பு அவருக்கு புதிய பட வாய்ப்பு ஒன்றையும் பெற்றுத்தந்திருக்கிறது. உடனே நடிக்க வந்துவிட்டார். பரபரப்புக்கு பயன்பட்ட காதல் மேட்டர் சீரியஸ் ஆகி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த அனுபாமா, பும்ராவா? யார் அவர் என்று கேட்டு அதகளம் செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’பும்ராவா யார் அவர்? அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்கு தெரியும் மற்றபடி வேறு எதுவும் அவரைப்பற்றி தெரியாது.

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் யாரோ சிலர் பும்ராவுடன் என்னை இணைத்து வதந்தி பரப்பி வருகிறார்கள்’ என்றார் அனுபாமா. டுவிட்டர் பக்கத்தில் அனுபாமாவும், பும்ராவும் ஒருவரையொருவர் ஃபாலோ செய்ததால் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. தற்போது அனுபாமாவை அன்ஃபாலோ செய்திருக்கிறார் பும்ரா. அதாவது பின்தொடர்வதை நிறுத்திவிட்டாராம்.

Tags :
× RELATED இளம் நடிகருடன் நடிக்க துடிக்கும் ரகுல்