×

தோழிகளுடன் பாவனா குத்தாட்டம்

கோலிவுட் படங்களுக்கு நடிகை பாவனா முழுக்குபோட்டு மல்லுவுட்டுக்கு சென்று பத்து வருடமாகிவிட்டது. சித்திரம் பேசுதடி படத்தில் இயக்குனர் மிஷ்கின் அறிமுகப்படத்தியதையடுத்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான் என பல படங்களில் ஜரூர் காட்டினார் பாவனா. 2009ம் ஆண்டு அசல் படத்தில் அஜீத்துடன் நடித்தார். அத்துடன் கோலிவுட்டுக்கு பை பை சொல்லி புறப்பட்ட பாவனா மல்லுவுட்டிலேயே தங்கிவிட்டார். அவ்வப்போது கன்னட படங்களில் நடித் தார்.

ஒரு சில சர்ச்சைகளிலும் சிக்கி மீண்ட பாவனா கன்னட பட தயாரிப்பாளர் நவீன் என்பவரை கடந்த ஆண்டு மணந்து இல்லறத்தில் செட்டிலானார். கல்யாணம் ஆனாலும் தேர்வு செய்து படங்களில் நடிப்பதுடன் சகதோழி நடிகைகளுடன் நட்பை பாராட்டி வருகிறார். சமீபத்தில் மல்லுவுட் நடிகை சில்பாவின் தங்கை திருமண நிச்சயதார்த்த விழாவில் பாவனா கலந்துகொண்டார். ரம்யா நம்பீசன், மிருதுலா என மற்ற சகநடிகை தோழிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஒரு கட்டத்தில் பாவனாவுடன் தோழிகள் ஒன்றுகூடி நடனம் ஆடத் தொடங்கிவிட்டனர். இந்தி பாடல்களை சுழலவிட்டு அதற்கேற்ப அனைவரும் ஒரே பாணியில் நடனம் ஆடி அமர்க்களப்படுத்தினர். நடன படங்களை நடிகைகள் தங்கள் இன்ஸ்டாவிலும் பகிர்ந்தனர். கோலிவுட்டை மறந்தாலும் தோழிகளை மறக்காமல் இருக்கும் பாவனாவுக்கு நெட்டி ஸன்கள் பாராட்டு தெரிவித்ததுடன் மீண்டும் கோலிவுட் பக்கம் தலைகாட்டமாட்டீர் களா என்று பாவனாவுக்கு கேள்வியும் எழுப்பி உள்ளனர்.

Tags :
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்