×

ஸ்ரீரெட்டியின் புது பிசினஸ்!

ஸ்ரீரெட்டின்னாலே தென்னிந்திய சினிமாவே சும்மா அதிருதில்லே. தெலுங்குத் திரையுலகத்தில் #MeToo சுனாமியைக் கிளப்பிவிட்டு, இப்போது சென்னையில் செட்டில் ஆகியிருக்கிறார்.அது மட்டுமின்றி இயக்குநர்கள் சுந்தர்.சி, முருகதாஸ் மற்றும் ராகவா லாரன்ஸ் ஏரியாவில் பாலியல் வெடிகுண்டுகளை வீசி தமிழ்த் திரையுலகையும் பரபரப்புக்கு உள்ளாக்கினார். அம்மணியின் அடுத்த குறி விஷால் போலிருக்கிறது. நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திடீரென விஷால் மீது பெண்கள் விவகாரத்தில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார்.

விஷாலுக்கு எதிர்த்தரப்பாக மல்லுக்கட்டும் கல்வித்தந்தை மற்றும் தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே, விஷாலின் பெயரை டேமேஜ் செய்ய ஸ்ரீரெட்டி முன்வந்திருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். ‘யார் பெயரை வேண்டுமானாலும் நான் டேமேஜ் செய்யத் தயார். எந்தளவுக்கு டேமேஜ் செய்யவேண்டுமோ அந்தளவுக்கு டாரிஃப் ரேட் மாறும்’ என்று புதுவிதமான பிசினஸை ஸ்ரீரெட்டி ஆரம்பித்திருக்கிறார் என்று விஷால் ஆதரவாளர்கள் நொந்துபோய் சொல்கிறார்கள்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!