சிங்கம், கரடியுடன் காஜல் ரவுசு... நா ரொம்ப டெரர்...

கோலிவுட், டோலிவுட்டில் பிஸியாக இருந்த காஜல் அகர்வால் தற்போது அதிக படங்கள் இல்லாமல் ஃப்ரியாக இருக்கிறார். ஏற்கனவே அவர் நடித்த ‘பாரிஸ் பாரிஸ்’ படம் முடிந்த நிலையில் கோமாளி படத்தில் மட்டும் நடித்து வருகிறார். ஓய்வு நேரத்தை செலவிடவும் தனது பிறந்தநாளை கொண்டாடவும் முடிவு செய்து துபாய் பறந்தார் காஜல்.

கரப்பான் பூச்சியை கண்டாலே காட்டு கத்தல் கத்திக்கொண்டு ஓட்டம் பிடிக்கும் காஜல் துபாயில் உள்ள விலங்குகள் பூங்காவிற்கு சென்று அவற்றுடன் விளையாடி, வடிவேலு பாணியில் நான் ரொம்ப டெரரான ஆளு என்று பாவ்லா காட்டியிருக்கிறார். ஒட்டகச் சிவிங்கி இருக்கும் பகுதிக்கு சென்ற காஜல் அகர்வால், அங்குள்ள மரத்தின் கிளையை கவ்வுவதுபோல் ஆக்‌ஷன் செய்ய அதைப்பார்த்த ஓட்டகச் சிவிங்கி காஜலை துரத்துகிறது.

பாண்டா கரடியின் அருகில் சென்று அதற்கு உணவு அளிப்பதுடன் மற்றொரு குட்டி பாண்டாவுக்கு பாட்டிலில் பால் கொடுத்து குடிக்க வைக்கிறார். பின்னர் வெள்ளை சிங்கங்கள் இருக்கும் பகுதிக்கு சென்றவர் இரும்பு வேலிக்கு வெளியே நின்று இங்கும் அங்கும் ஓட அவரை துரத்திக்கொண்டு இரண்டு சிங்கங்களும் ஓடுகிறது.

இந்த காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டி ருக்கிறார் காஜல். இதுபற்றி காஜல் கூறும்போது,’சிறிய பூச்சி மற்றும் கொறிக்கும் அணில்கள் போன்றவற்றை பார்த்தாலே நான் பயப்படுவேன். அப்படிப்பட்ட என்னை அந்த பயத்திலிருந்து மீளும் வகையில் ஒரு வாய்ப்பாக மிருகங்களுடன் பழக அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு நன்றி. இது எனக்கொரு வித்தியாசமான அனுபவம்’ என்றார்.

Tags : Kajal Rouse ,
× RELATED நீ என்ன பெரிய பிஸ்தாவா? சிங்கத்தின் முன் நின்று சவால் விட்ட ஆசாமி