படத்திலிருந்து வாணி போஜன் திடீர் விலகல்

டி.வி  தொடர்களில் நடித்து வந்த  வாணி போஜன், லோகேஷ்  குமார் இயக்கும் என் 4 என்ற  படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். ஆனால், திடீரென்று அப்படத்தில் இருந்து  விலகியுள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக தன்னால் இப்படத்தில் நடிக்க  முடியவில்லை என்று காரணம் சொல்லி இருக்கிறார். விலகியுள்ளார். தற்போது  அவருக்கு பதிலாக சரண்யா துராதி நடிக்கிறார்.

பர்மா, நளனும் நந்தினியும்,  பதுங்கி பாயணும் தல ஆகிய படங்களை தொடர்ந்து மைக்கேல் ஹீரோவாக நடிக்கும்  படம் இது. தமிழில் வைபவ் நடிக்கும் படத்திலும், தெலுங்கில் விஜய்  தேவரகொண்டா தயாரிக்கும் படத்திலும் வாணி போஜன் நடித்து வருகிறார்.

× RELATED நெல்லை- செங்கோட்டை பாசஞ்சர் ரயில்...