×

வழுக்கி விழுந்த கீர்த்தி சுரேஷ்

படப்பிடிப்பு தளங்களில் நடிகர், நடிகைகள் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கும்போது விபத்துக்குள்ளாகி எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன. விஷால், ராம்சரண், சந்தீப் கிஷன் அமலாபால், டாப்ஸி உள்ளிட்ட பலர் சமீபகாலத்தில் இதுபோல் பாதிப்புக்குள்ளாகினர். நடிகை கீர்த்தி இன்றைக்கு நடனத்திலும் கைதேர்ந்த வராக இருக்கிறார். ஆனால் மலையாளத்தில் அவர் அறிமுகமான படத்தில் நடனம் ஆடும்போது வழுக்கி விழுந்த தகவல் தற்போது நெட்டில் வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

பாறை மீது நின்றபடி துள்ளி குதித்து கீர்த்தி நடனமாடும் காட்சி அமைக்கப்பட்டது. டைரக்டர் டேக் சொன்னதும் கீர்த்தி குதித்து ஆடும்போது பாறையில் தேங்கியிருக்கும் தண்ணீர் வழுக்கி கீழே விழுகிறார். அதிர்ச்சியில் கீழேயே விழுந்த கிடக்கும் அவரை பட குழுவினர் தூக்கி நிறுத்துகின்றனர். இந்த வீடியோ தற்போது ெநட்டில் வைரலாகி இருக்கிறது.

கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் கடந்து தற்போது பாலிவுட்டிற்கும் கீர்த்தி சென்றிருக்கிறார். அதற்கு காரணம் அவரது கடின உழைப்புதான். நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்ததிலிருந்து அவர் மீது இயக்குனர்கள் கவனம் திரும்பியது. அறிமுகப் படத்தில் விழுந்தாலும் நிலைத்த இடம்பெறும் அளவுக்கு எழுந்து நின்றிருக்கிறார் கீர்த்தி என்று நெட்டிஸன்கள் அவர் பாறையில் வழுக்கி விழும் வீடியோவை பார்த்து மெசேஜ் பகிர்ந்திருக்கின்றனர்.

Tags : Keerthi Suresh ,
× RELATED அனிமேஷன் வீடியோவுக்கு டப்பிங் பேசிய பிரபாஸ்