×

மோசடி - விமர்சனம்

அரசியல்வாதியான  என்.சி.பி.விஜயனின் நம்பிக்கைக்கு உகந்த ஒரு அடியாளாக இருக்கிறார், ஹீரோ விஜூ. அந்த நேரத்தில் பிரதமர் 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாது என்று அறிவிப்புசெய்கிறார். இதனால், பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றுகின்ற பொறுப்பு விஜூக்கு கிடைக்கிறது. அதை வைத்து மோசடி செய்கிறார். சேர்த்த 100 கோடி ரூபாயை, விஜூ வீட்டில் வைக்கும்படி சொல்கிறார் அரசியல்வாதி. ஆனால், திடீரெனஅவ்வளவு பணமும் காணாமல் போகிறது.

இதனால் ஆத்திரம் அடையும் அரசியல்வாதி, 30 நாட்கள் முடிவதற்குள் அந்த பணத்தை தராவிட்டால், மனைவியை கொன்று விடுவேன் என்று  கெடு விதிக்கிறார். இதனால் விஜூ தனது நண்பர்களுடன் சேர்ந்து மோசடிகள் செய்து, 100 கோடி ரூபாய் சம்பாதிக்க முயற்சிக்கிறார். அதுபோல் சம்பாதிக்க முடிந்ததா? தன் மனைவியை மீட்டாரா என்பது மீதி கதை.

அன்றாடம் செய்தித்தாளில் படிக்கும் இரிடியம் மோசடி, சங்கு மோசடி, பாம்பு மோசடி ஆகியவற்றுடன், பண மதிப்பு இழப்பின்போது நடந்த சில மோசடிகளையும் இணைத்து ஒரு படம் கொடுத்துள்ளார், புது இயக்குனர் கே.ஜெகதீசன். விதவிதமான மோசடிகளை காண்பித்த அவர், சுவாரஸ்யம் கலந்த திரைக்கதை உதவியுடன் அதைச் சொல்லி இருந்தால், படம் மேலும் ரசிக்க வைத்து இருக்கும்.

மோசடிகள் எப்படி நடக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டிவிடுவதால், அதிலிருந்து பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தாலும், கதைக்கு அது பெரிய அளவில் உதவி செய்யவில்லை. நடித்த அனைவரும் கூடுதல் பயிற்சி பெற்று நடித்து இருக்கலாம். மணிகண்டன் ஒளிப்பதிவு, ஷாஜகான் இசை படத்துக்கு கைகொடுக்கவில்லை. பண மதிப்பு இழப்பின் காரணமாக பொதுமக்கள் அனுபவித்த அவஸ்தைகளை காட்சிகளாக சொன்னவிதத்திலும் மற்றும் ‘ஏமாற்றாதே’, ‘ஏமாறாதே’ என்று நல்ல மெசேஜ் சொன்ன விதத்திலும் கவனத்தை ஈர்த்துஉள்ளது, மோசடி.

Tags :
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...