சாமியாரின் பக்தையா? பாடகி அலறல்

ஆந்திரா சாமியார் ஒருவர் தேசிய ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாடகி சுனிதா அடிக்கடி என்னை சந்திப்பார்கள். அவர்கள் எனது பக்தர்கள் என கூறியிருந்தார். இந்த விவகாரம்பற்றி ரஜினியோ, சிரஞ்சீவியோ பதில் எதுவும் கூறாமல் மவுனமாக உள்ளனர். பாடகி சுனிதா இதுபற்றி உடனடியாக இணைய தள பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

‘சமீபகாலமாக தினம் தினம் பல்வேறு வதந்திகளை நான் கடந்து வந்து கொண்டிருக்கிறேன். அதில் ஒருசிலவற்றை கண்டுகொள்ளாமல் விட்டாலும் சிலவற்றுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறேன்.

சாமியார் ஒருவர் என் பெயரை குறிப்பிட்டு நான் அவருடைய பக்தை, அடிக்கடி வந்து தரிசனம் செய்வதாக கூறியிருக்கிறார். அதைப்பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன். யாருடைய பெயரையாவது பயன்படுத்த அவர்களால் எப்படி முடிகிறது. இதுபோன்ற பிரச்னைகளில் அதிகம் தலையிட்டு பதில் அளிப்பதா? இல்லையா? என்ற குழப்பம் இருக்கிறது’ என கதறாத குறையாக புலம்பியிருக்கிறார் பாடகி சுனிதா.

Tags : preachers ,singer ,
× RELATED கார்த்திகை தீபத்திருநாள் : வழிபாட்டு முறைகளும் பலன்களும்