சிபிராஜ் படம் மீது புகார்

சிபிராஜ் நடிப்பில் அறிமுக டைரக்டர் அன்பரசன் இயக்கும் படம் வால்டர். இந்த படத்துக்கான துவக்க விழா சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னிடம் இருப்பதாகவும் அர்ஜுன், விக்ரம் பிரபு நடிப்பில் வால்டர் படத்தை தான் தயாரிக்க அன்பரசுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் சிங்கார வேலன் என்ற தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

அர்ஜுன், விக்ரம் பிரபுவுடன் துவக்க விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் சிபிராஜ் நடிக்கும் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் புகாராக அளிக்கப்பட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags : Sibiraj ,
× RELATED நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி அறிக்கை