நடிகரானது ஏன்? - இயக்குனர் சுசீந்திரன்

சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ள இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது: ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கிய சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தில், இப்போது நான் நடித்துள்ள கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்ற விவாதத்தில், டைரக்டர் மிஷ்கின் என் பெயரை சிபாரிசு செய்துள்ளார். உடனே விக்ராந்த் என்னிடம் பேசினார். பிறகு நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அடிப்படையில் நான் இயக்குனராக இருந்தாலும், சுட்டுப் பிடிக்க உத்தரவு ஷூட்டிங் ஸ்பாட்டில், படத்தின் இயக்குனர் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற மனநிலையுடன் இருந்தேன். இப்போது நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வருகிறது. என்றாலும், இன்னும் நான் இயக்குனராக உச்சம் தொடவில்லை. படங்கள் இயக்கிக்கொண்டே நடிப்பிலும் கவனம் செலுத்துவேன். தற்போது கென்னடி கிளப், ஏஞ்சலினா, சாம்பியன் ஆகிய படங்களை இயக்கி வருகிறேன்.

Tags : Suseenthiran ,
× RELATED இளம் நடிகருடன் நடிக்க துடிக்கும் ரகுல்