×

நோ முத்தம்... நோ கிளாமர்... தாக்குபிடிப்பாரா ராஷ்மிகா?

வெவ்வேறு மொழிப்படங்களிலிருந்து பல ஹீரோயின்கள் தமிழ் படத்தில் அறிமுகமாகின்றனர். தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா மன்தன்னாவுக்கு தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தும் ஏற்காமலிருந்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கதாபாத்திரத்தில் தனக்கு போதிய முக்கியத்துவம் இல்லை என்பதால் ராஷ்மிகா வெளியேறிவிட்டாராம். அதேபோல் தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்க அனில் ரவிபுடி இயக்கும் படத்தில் ராஷ்மிகா நடிக்கிறாராம்.

அனில் ரவிபுடி தனது படங்களில் ஹீரோயினுக்கு  முக்கியத்துவம் தந்து கதாபாத்திரங்களை வடிவமைப்பதால் அவரது படத்தில் நடிக்க  ஒப்புக்கொண்டிருக்கிறார் ராஷ்மிகா. முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன், கிளாமர் காட்டமாட்டேன் என ராஷ்மிகா கண்டிஷன் போடுகிறார். இந்த பாலிசியால் பல படங்கள் அவரிடமிருந்து பறிபோகிறது.

இதே கண்டிஷன தொடர்ந்து வந்தால் அவர் திரையுலகில் தாக்குப்பிடிப்பாரா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி உள்ளனர். நோ முத்தம்,,, நோ கிளாமர் என்று ஆரம்பகாலத்தில் கண்டிஷன்போட்ட பல ஹீரோயின்கள் பட வாய்ப்புகள் குறைந்தால் பாலிசியை பரணையில் தூக்கிபோட்டுவிட்டு டூ பீஸ், லிப் டு லிப் முத்தக் காட்சிகளில் நடிக்கவும் இறங்கி வருகின்றனர். அந்த நிலைக்கு ராஷ்மிகா வரக்கூடாது என்று ரசிகர்கள் இப்போதே அட்வைஸ் செய்திருக்கின்றனர். ராஷ்மிகா.... நீங்கள் செய்வீர்களா?

Tags : rashmika ,
× RELATED அனிமல் 2ல் ராஷ்மிகா நீக்கமா?