×

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2

யுனிவர்செல் இலுமினேஷன் தயார்ப்பில் கிறிஸ் ரெனாட் இயக்கத்தில் 2016ல் வெளியான ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்‘  அனிமேஷன் படத்தின் இரண்டாம் பாகம் ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2’. மேக்ஸ் மற்றும் டியூக் இருவரின் முதலாளி கேட்டி திருமணம் செய்துகொள்ள அவருக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஆரம்பத்தில் குழந்தை லியாமை தொல்லையாக நினைக்கும் மேக்ஸ் ஒரு கட்டத்தில் லியாமின் அன்புக்கு அடிமையாகி குழந்தையை நான் பாதுகாப்பேன் என முடிவு செய்துகொள்கிறது.

வெளி உலகம் ஆபத்தானது என நினைக்கும் மேக்ஸ் லியாமை அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள குடும்பமாக பிக்னிக் செல்கிறார்கள். அங்கே இயற்கை, புதிதாக ஆடுகள் மேய்க்கும் ரூஸ்டர் நாய் என நட்பு கிடைக்கிறது. இதற்கிடையில் ஸ்னோ முயல் மற்றும் டெய்ஸி இருவரும் சர்க்கஸ் புலி ஒன்றுக்கு உதவி செய்து அதை வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். ஆளில்லாத மேக்ஸ் வீட்டில் சர்க்கஸ் டைகரை தங்க வைக்க புலியைத் தேடி வில்லனும் புலிக்குக் கொடுமைகள் செய்த சர்க்கஸ் ஓனரும், வருகிறார்கள்.

மேலும் உடன் அவனது காவல் ஓநாய்களும் வருகின்றன.  பிக்னிக் சென்ற மேக்ஸ் மற்றும் அதன் குடும்பத்துடன் திரும்ப நடந்த அனைத்தையும் புரிந்துகொண்டு புலியைக் காப்பாற்ற குழுவாக களமிறங்கிறது. முடிவு என்ன என்பது மீதிக்கதை. அனிமேஷன் படம் தானே என நினைத்தபடி காட்சிகள் அமைக்காமல், எதார்த்தம், சென்டிமென்ட் என பார்த்து பார்த்து கதையை உருவாக்கியிருக்கிறார் கிறிஸ். நிச்சயம் செல்லப்பிராணிகள் வீட்டில் இருந்தால் இப்படிதான் செய்யுமோ என நம்மையும் நம்ப வைக்கும் படியான காட்சிகள். ஒவ்வொரு கேரக்டர்களிலும் அத்தனை நுணுக்கம்.

பூனையாக மாற முயற்சிக்கும் கேட்ஜெட், சூப்பர் மேனாக நினைத்து சேட்டைகள் செய்யும் ஸ்னோ முயல், அப்பாவியாக அலையும் டியூக் , கம்பீரமான ரூஸ்டர், மேக்ஸை பின் தொடரும் கோழி என ஒவ்வொரு கேரக்டர்களும் மனதில் நிற்கின்றன. படத்தின் ஆக்‌ஷன் , சேஸின் காட்சிகளுக்கு ஏற்ப அலெக்ஸான்ட்ரே டெஸ்பிளாட் பின்னணி இசை கூடுதல் பலம். மேலும் டிரெயினை பின் தொடர்ந்து மலை முகட்டில் இருந்து குதிக்கும் மேக்ஸ் காட்சி அப்ளாஸ் ரகம். ஒரே ஒரு வருத்தம் கொஞ்சம் முன்பே வெளியாகி குழந்தைகளின் கோடைகால விடுமுறைக்கும் டிரீட்டாக இருந்திருக்கலாம். கொஞ்சம் தாமதம். எனினும் நிச்சயம் தவறவிடாமல் பார்க்க வேண்டிய அனிமேஷன் படம்.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்