×

சசி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் இயக்குனர் சசி. இதில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பிறகு ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்தை சசி இயக்க உள்ளார். படத்துக்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை. இந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் ரீமேக்தான் இப்படம் என பேசப்படுகிறது.

ஆனால் இதை படக்குழு உறுதி செய்யவில்லை. பட ஹீரோயின் உள்பட மற்ற கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. திரைக்கதை அமைப்பு பணிகளும் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Harish Kalyan ,Sasi ,
× RELATED மத்திய பிரதேசத்தில் இருந்து...