சிம்பன்ஸிகளை தத்தெடுத்த படக்குழு

ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், ராதாரவி, ராகுல் தாத்தா நடித்துள்ள படம், கொரில்லா. டான் சாண்டி இயக்கியுள்ளார். படம் குறித்து ஜீவா கூறியதாவது: கொரில்லா  படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்த காரணம், இதில் நடித்த குரங்கு, இதற்கு முன் ஆங்கில படத்தில்  நடித்திருந்தது. ஏற்கனவே அது படப்பிடிப்பில்  பங்கேற்ற இடங்களில் ஷூட்டிங் நடத்தியதால், ரொம்ப பிரெண்ட்லியாக பழகியது.

படப்பிடிப்பில் கொரில்லாவிடம் அடி, உதை, குத்து வாங்காதவர்களே கிடையாது. மூட் இருந்தால் நன்றாக நடிக்கும். சில நேரங்களில் செமையாக அடிக்கும். யாரும் அதை தடுக்கக்கூடாது. பிறகு மனம் மாறி மீண்டும் குழந்தை போல் பழகும். இரண்டு சிம்பன்ஸிகளை படக்குழுவினர் தத்தெடுத்தனர். வரும் 21ம் தேதி படம் ரிலீசாகிறது.

Tags : filmmaker ,
× RELATED திரைப்படத்தயாரிப்பாளரை மிரட்டி பணம்...