நடிகைக்கு பிரதமர் ஆசை... நெட்டிஸன்கள் ரிவிட்

மூத்த நடிகைகள் மட்டுமல்லாமல் இளம் ஹீரோயின்களும் அரசியலில் குதிப்பது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் நடிகை ஒருவருக்கு அரசியல் ஆசை கிடையாதாம், ஆனால் பிரதமர் ஆகணுமாம். சர்ச்சைக்கு பேர் போன நடிகைகளில் ஒருவராக மாறிக்கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இவர் தன்னைவிட 10 வயது இளையவரான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து மணந்தார். சில வாரங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி பின்னர் அது பிசுபிசுத்துப்போனது.

சமீபத்தில் பிரியங்காவிடம் அரசியலில் குதிப்பீர்களா என்றதற்கு அதிர்ச்சியான பதில் அளித்தார்.  ‘எனக்கும், என் கணவர் நிக் ஜோனஸுக்கும் அரசியல் சார்ந்த விஷயங்கள் பிடிக்காது. ஆனாலும் நான் பிரதமர் பதவிக்கும், நிக் ஜோனஸ் ஜனாதிபதி பதவிக்கும் போட்டியிட விரும்புகிறேன். இருவரும் இணைந்து ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டார் பிரியங்கா சோப்ரா. விவரம் தெரியாமல் பேசும் பிரியாங்காவின் பதில் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக பலரும் அவரை விமர்சித்திருக்கிறார்கள்.

Tags : actress ,Netisans ,
× RELATED மிலாது நபி முஸ்லிம்களுக்கு பிரதமர் வாழ்த்து