ஸ்ருதியை கழற்றும் தயாரிப்பு; ஹீரோ சப்போர்ட்

இரண்டு வருடத்துக்கு முன் வெளியான சிங்கம் 3 படத்தில் சூர்யாவுடன் ஜோடி போட்ட ஸ்ருதிஹாசன் நடிப்புக்கு பை சொல்லிவிட்டு லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேலுடன் டேட்டிங் தொடங்கினார். இந்த நட்பு  கல்யாணம் வரை நீளும் என்று பேசப்பட்ட நிலையில் திடீரென்று இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்தனர். இதையடுத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார் ஸ்ருதி. எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ரீஎன்ட்ரி ஆகிறார்.

விட்ட இடத்தை ஸ்ருதி பிடித்துவிடுவார் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் போடும் கண்டிஷனால் புதிய  படங்கள் கைநழுவுகிறதாம். அப்படி என்ன கண்டிஷன் போடுகிறார் என்றதற்கு கண்டிஷனெல்லாம் ஒண்ணுமில்ல. சம்பளம்தான் பிரச்னை என்கிறது ஒரு தகவல். தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ஸ்ருதி திடீரென்று படங்கள் இல்லாமல் சோர்வானார்.

ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் அவருக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டோலிவுட் ஹீரோ ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதியை கேட்டனர். இப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். சம்பளமாக ஒன்றரை கோடி தர வேண்டும் என்று ஸ்ருதி கேட்டதால் தயாரிப்பாளர் ஷாக் ஆகிவிட்டாராம். அவ்வளவு சம்பளம் கட்டுபடியாகாது வேறு ஹீரோயினை பாருங்கள் என தயாரிப்பாளர் சொல்லிவிட்டார். ஆனால் ஸ்ருதிதான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம் ஹீரோ ரவி தேஜா.

Tags :
× RELATED இளம் நடிகருடன் நடிக்க துடிக்கும் ரகுல்