×

மீண்டும் காதல் ஜோடியாகும் நட்சத்திர தம்பதி

பல்வேறு ஹீரோயின்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் ஆர்யா. யாரும் செட்டாகவில்லை. தனக்காக பெண் பார்க்கும் படலத்தையும் நடத்தினார். அதிலும் யாரும் சிக்கவில்லை. விஷால், ஆர்யா இருவரும் நண்பர்கள். இருவரில் முதலில் திருமணம் செய்வது யார் என்ற போட்டியும் இருந்தது. அந்த வகையில் விஷாலை முந்திக்கொண்டார் ஆர்யா. கஜினிகாந்த் படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த சாயிஷாவை காதலித்து மணந்தார் ஆர்யா.

வரும் அக்டோபர் 9ம் தேதி விஷால் தனது காதலி அனிஷாவை மணக்கிறார். எதிர்பாராத வகையில் நட்சத்திர தம்பதிகளாக மாறியிருக்கும் ஆர்யா, சாயிஷா தங்களது நடிப்பு தொழிலையும் தொடர முடிவு செய்திருக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படமாக டெடி உருவாகிறது. படத்தில் ஆர்யா, சாயிஷா காதல் ஜோடிகளாக நடிக்க உள்ளனர்.

ஷக்தி ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இதன் தொடக்க விழாவும் நடந்து விட்டது. திருமணத்துக்கு பிறகு ஆர்யா, சாயிஷா நட்சத்திர தம்பதி இணைந்து நடிக்கும் படமாக ‘டெடி’ உருவாகவிருக்கிறது. கடந்த மாதம் நட்சத்திர தம்பதிகள் சமந்தா, நாக சைதன்யா இணைந்து நடித்த மஜ்லி தெலுங்கு படம் வெளியாகி ஹிட்டானது. அந்த பாசிடிவ் வைப்ரேஷன் ஆர்யா, சாயிஷா தம்பதிக்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்