×

ஜிப்ஸியாகி விட்டேன்: ஜீவா

ஜீவா நடித்துள்ள படம் ஜிப்ஸி. ராஜூ முருகன் இயக்கி உள்ளார், சந்தோஷ் நாராணயன் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜீவா பேசியதாவது: கற்றது தமிழ், ராம் படங்களுக்கு பிறகு ஜிப்ஸி என் கேரியரில் முக்கியமான படம். இந்தப் படத்திற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணம் செய்திருக்கிறேன். பல்வேறு கலாச்சாரம், பல்வேறு மொழி மக்களை சந்தித்தேன். எல்லோரும் ஒரே சிந்தனை ஒரே ரசனை உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஒரு தேசாந்திரியாக வாழ்வது எவ்வளவு அற்புதமானது என்பதை உணர்ந்தேன். படத்தில் நடித்து முடித்து விட்டாலும் படம் என் வாழ்க்கையில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. யோசித்து பார்த்தால் நானும் ஜிப்ஸியாக மாறி விட்டேன், என் அப்பா ராஜஸ்தானி, அம்மா தமிழ்நாடு, மனைவி பஞ்சாபி என என் வீட்டிலேயே பன்முக கலாச்சாரம் இருக்கிறது என்றார்.

Tags : Jeeva ,
× RELATED தி.நகர் நடேசன் பூங்கா, ஜீவா பூங்காவில்...