×

இளம் ஹீரோக்களுக்கு ஓகே... ரம்யா நம்பீஸன் புது டெக்னிக்

விஜய், அஜீத் போன்றவர்கள் தங்கள் வயதுக்கு ஏற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்யத் தொடங்கிவிட்டனர். ஹீரோவாக நடித்தாலும் ஒரு குழந்தைக்கு தந்தையாக பல படங்களில் நடிக்கின்றனர். அவர்களுக்கு ஜோடியாக நடிகைகளும் தானாகவே அம்மாவாக நடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அம்மா வேடத்தில் நடிப்பதை விரும்பாத ரம்யா நம்பீஸன் புது டெக்னிக் கையாள்கிறார். இளம் ஹீரோ, புதுமுகங்களுக்கு ஜோடிபோடுவதே அந்த டெக்னிக்.

இதில் காதலியாக நடிக்கும் கதாபாத்திரங்களே அதிகம் வருகிறது. அம்மா கதாபாத்திரம் என்பதற்கான வாய்ப்பு இல்லை. சமீபத்தில் வெளியான நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் இளம் ஹீரோ கவின் காதலியாக ரம்யா நம்பீஸன் நடித்தார். அதுவும் நெருக்கமான காட்சிகளிலும், முத்தக்காட்சியிலும் நடித்தார். இளம் ஹீரோக்களுடன் நடிப்பதுபற்றி கேட்ட போது,’எனக்கு மார்க்கெட் பற்றி கவலை இல்லை.

புதுமுகங்கள், இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொள்கிறேன். அம்மாவாக நடிப்பதைவிட இது எவ்வளவோ மேல். தற்போது  விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் இளையராஜா பாட வாய்ப்பு கிடைத்ததா என்கிறார்கள். அவர் இசையில் பாட எனக்கு பயம். ஆனால் அவர் நிகழ்த்திய நேரடி இசை நிகழ்ச்சியில் பாட  கிடைத்த வாய்ப்பு எனது பாக்யம்’ என்றார் ரம்யா நம்பீஸன்.

Tags : Ramya Nambisan ,
× RELATED அக்டோபர் 6ல் 10 படங்கள் ரிலீஸ்