‘லவ்வும் இல்லை கிவ்வும் இல்லை’ : அஞ்சலி அசால்ட்

‘எங்கேயும் எப்போதும்’ ஜோடி ஜெய், அஞ்சலி காதலிப்பதாக கிசுகிசு பரவி வந்தது. தீவிரமாக கிசுகிசு பரவிய நேரத்திலும் இதுபற்றி இவரும் கண்டு கொள்ளாமல் மவுனம் காத்தனர். நெட்டில் பரவிய தோசை சவால் (தோசா சேலன்ஞ்) போட்டியில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்ட படங்கள் வந்ததுடன் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் இருவரும் பரிசு பொருட்கள் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

கடந்த சில மாதமாகவே இவர்களைப் பற்றிய கிசுகிசு ரிவர்ஸ் ஆகியிருக்கிறது. இருவரும் பிரேக் அப் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி ஜெய் சமீபத்தில் கூறும்ேபாது, ‘அஞ்சலி என் நண்பர் மட்டுமே, எங்களுக்குள் காதல் இல்லை’ என்றார். அதை வழி மொழிந்து அஞ்சலியும் லவ்வும் இல்லை, கிவ்வும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

ஐதராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அஞ்சலி, ‘யாரையும் காதலிப்பதாக ஒருபோதும் நான் சொன்னதில்லை. யாருடனும் ரிலேஷன் ஷிப்பிலும் இருந்ததில்லை. எனது குடும்பத்தினரும் இதுபற்றி என்னிடம் கேட்டார்கள். கிசுகிசுக்களுக்கு நான் பொறுப்பு கிடையாது. என்னைப்பற்றி கிசுகிசு எழுதுபவர்களுக்கு சொல்கிறேன், ஐ டோன்ட் கேர். லவ்வும் இல்லை கிவ்வும் இல்லை. நடிப்புதான் எனக்கு முக்கியம்’ என்றார்.

Tags : Anjali Aslat ,
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக...