பாக்ஸர் படத்திற்காக டாங்கிலியிடம் பயிற்சி பெறும் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் பாக்ஸ்ர் படத்திற்காக ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்த டாங்கிலியிடம் பயிற்சி பெற்று வருகிறார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தடம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது விவேக் இயக்கத்தில் பாக்ஸர் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

அருண்விஜய் ஜோடியாக ரித்திகா சிங் நடித்து வருகிறார். இந்நிலையில் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் Johnny Tri-Nguyen உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குருவுடன் என்கிற வார்த்தையை அதில் குறிப்பிட்டுள்ளார். 

× RELATED குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்...