இனி நடனம் ஆட மாட்டேன், சத்தியம்; மாதவன் தரும் ஷாக்

ஹீரோ, ஹீரோயின்கள் தவிர காமெடியன்களுக்கும் தற்போது நடனம் ஆடத் தெரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஹீரோக்கள் நடனத்தில் கெட்டிக்காரர்களாக இருந்தாலும் மாதவன், விஜய்சேதுபதி போன்ற ஒரு சில ஹீரோக்கள் நடனம் ஆடுவதை தவிர்த்து நடிப்பிலேயே ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர். இந்நிலையில், ‘இனி நடனம் ஆட மாட்டேன்’ என்று ஸ்டேட்மென்ட்டே விட்டிருக்கிறார் மாதவன்.

சமீபத்தில் நடன குழு ஒன்று வேர்ல்ட் ஆப் டேன்ஸ் நிகழ்ச்சியில் ஜெயித்து பெரும் தொகையை பரிசாக அள்ளியது. அந்த வீடியோவை பதிவிட்டு இந்த குழுவின் நடனத்தை பார்த்தபிறகு, ‘நான் இனி என் படங்களில் நடனம் ஆட மாட்டேன். இது சத்தியம்’ என மெசேஜ் போட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் மாதவன்.

× RELATED ஊட்டி அருகே நீரோடையை மறித்து தடுப்பணை... அதிர்ச்சியில் விவசாயிகள்