ரீமாவின் முட்டாள்தனம் : நடிகை அட்டாக்

தமிழில் ‘யுவன் யுவதி, படத்தில் நடித்திருப்பதுடன் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கும் ரீமா கல்லிங்கல் அவ்வப்போது நடக்கும் சர்ச்சைகள் மீது கருத்துக்கள் சொல்லி  திணறடிக்கிறார். தற்போது சினிமாவுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். கேரளாவில் பிரசித்தி பெற்ற பூரம் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம், அந்த விழாவில் பெண்களை அனுமதிப்பதில்லை. இது ஆச்சரியமாக இருக்கிறது.

வெளிநாடுகளில் இதுபோன்ற விழாக்களில் ஆண், பெண் இருவரையும் அனுமதிக்கின்றனர். ஆண், பெண் சமம் என்ற மனப்பான்மை இல்லாவிட்டால் பிறகு அதுபோன்ற விழாக்களுக்கு என்ன அர்த்தமிருக்கப்போகிறது?’ என்று கேட்டிருந்தார். ரீமாவின் இந்த கேள்விக்கு மல்லுவுட் நடிகை மாயா மேனன் பதிலடி தந்திருக்கிறார். ‘ரீமா என்னைப்போல் நடிப்பு துறையிலிருக்கலாம், ஆனால் அவரது முட்டாள் தனமான இந்த கருத்துக்கு ஆதரவு தர முடியாது.

திருச்சூரில் நடக்கும் பூரம் விழாவில் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்கின்றனர். பெண்கள் தனிப்பட்ட காரணத்தால் செல்லாமல் இருக்கலாம். பூரம் விழாவில் பெண்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை. நீங்கள் (ரீமா) சொல்லும் ஸ்டேட்மென்டிலிருந்தே அந்த விழாவில் நீங்கள் ஒருபோதும் கலந்துகொண்டதில்லை என்று தெரியவருகிறது’ என அதிரடி அட்டாக் நடத்தியிருக்கிறார் மாயா மேனன்.

Tags : Reema ,Attac ,
× RELATED கூட்டமின்றி வெறிச்சோடிய இடைப்பாடி புதன்சந்தை