24 7 உழைப்புக்கு குட் பை காஜல் முடிவு

தூக்கத்தை தொலைத்து இரவு, பகல் பாராமல் 24 மணிநேரமும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் நடிகை காஜல் அகர்வால். இவர் சினிமாவுக்கு வந்து 12 வருடம் ஆகிவிட்டது. 33 வயது ஆகும் காஜலுக்கு நடிப்பு தற்போது அலுப்பு தட்ட ஆரம்பித்திருப்பதுபோல் தெரிகிறது. ஆனாலும் இப்போதும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோடும் தனது நிலையை தக்க வைத்திருக்கிறார்.

24 மணி நேர நடிப்புக்கு குட்பை சொல்ல முடிவு செய்திருக்கும் காஜல் அகர்வால் இதுபற்றி கூறும்போது,’நான் இப்போதும் வேலையில் ஆர்வம் கொண்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் 24x7 என்று சொல்லும் அளவுக்கு வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் உழைக்கப்போவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காஜல் அகர்வால் இணைய தள இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எந்த நாட்டுக்கு சென்றாலும் உடனடியாக அந்த தகவலை தனது இணைய தள பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வாலுக்கு 10 மில்லியன் அதாவது ஒரு கோடி ரசிகர்கள் ஃபாலோயர்களாக இருக்கிறார்கள்.

Tags : Kajal End of Work ,
× RELATED புரோ வாலிபால் பிப்.7ல் தொடக்கம்