சன்னி லியோன் குடும்ப பெண்ணா...? கணவரே ஒப்புக்கொள்ள மாட்டார்; நடிகர் ஜெய் அதிரடி

ஆபாச படங்களில் நடித்து தன்னை போர்ன் ஸ்டாராக வெளிப்படுத்திக் கொண்ட சன்னி லியோன், திடீரென்று சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, 2012ம் ஆண்டு ஜிஸம்-2 படம் மூலம் அறிமுகமானார். ராகினி எம்எம்எஸ் 2 உள்ளிட்ட சில இந்தி படங்களிலும் தமிழில் வட கறி படத்தில் குத்துபாடலுக்கும், தற்போது வீரமாதேவி படத்தில் போர் வீராங்கனையாகவும் நடித்து வருகிறார். சன்னி லியோனை இன்னமும் பலர் அவரது கடந்த காலத்தை குறிப்பிட்டு விமர்சிக்கிறார்களாம்.
 
இதுபற்றி ஆதங்கத்துடன் கூறிய சன்னி,’எனது கடந்த காலத்தை சுட்டிக்காட்டி சிலர் பேசுகின்றனர். அதுபற்றி கவலைப்படவில்லை. எனக்கென ஒரு இடத்தை நான் ஏற்படுத்தியிருக்கிறேன். சிறிய அளவில் எனக்கு நட்பு வட்டம் உள்ளது. எனது நீண்ட நாள் காதலர் டேனியல் வெபரை திருமணம் செய்துகொண்டேன். 2017ம் ஆண்டு நிஷா என்ற குழந்தையை தத்தெடுத்ததுடன் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்து வளர்க்கிறேன். குடும்ப வாழ்க்கை, சினிமா வாழ்க்கை ஆகிய இரண்டையும் கையாள்வது கடினமாக உள்ளது’ என்றார்.

சன்னி லியோனுடன் இரண்டு முறை இணைந்து நடித்திருக்கிறார் நம்மூர் நாயகன் ஜெய். அவரிடம், சன்னி லியோன் இப்போது குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து குடும்ப பெண்ணாகிவிட்டாரே உங்களிடம் இதுபற்றி சொன்னாரா என்றபோது... ‘வட கறி படத்துக்கு பிறகு மதுர ராஜா மலையாள படத்தில் அவருடன் நடித்தபோது தனது குழந்தைகள்பற்றி என்னிடம் கூறினார். அவர் குடும்ப பெண்ணாகிவிட்டார் என்று சொல்கிறீர்கள்... அவரது கணவரே அவரை அப்படி சொல்லமாட்டாரே....’ என்ற அதிரடி கமென்ட்டையும் வீசினார் ஜெய்.

Tags : Sunny Leone ,family girl ,Actor ,
× RELATED சேர்ந்து வாழ்வது தொடர்பாக சமரசம் பேச...