அர்னால்ட் முதுகில் செம மிதி

டெர்மினேட்டர், பிரிடேட்டர் உள்பட பல்வேறு சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளவர் அர்னால்ட். கலிபோர்னியா மாகாணத்தின் மேயராகவும் இருந்திருக்கிறார். தற்போது ‘ஜர்னி டூ சைனா’ மற்றும் ‘டெர்மினேட்டர் டார்க் ஃபேட்’ படங்களில் நடித்து வருகிறார். தென்னாப்பிரிக்காவில் நடந்த ‘அர்னால்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா’ என்ற ஜிம் பாய்ஸ் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் பேசியபடி நடந்து சென்றார். அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்தனர்.

திடீரென மர்ம நபர் பின்னால் இருந்து தாவிகுதித்து அர்னால்ட் முதுகில் இரண்டு கால்களாலும் மிதித்தார். கட்டுமஸ்தான அர்னால்டுக்கு இதில் ஒன்றும் ஆகவில்லை. எத்தி மித்த நபர்தான் சுவற்றில் மோதியது போல் சொத்தென்று கீழே விழுந்தார். உடனடியாக பவுன்ஸர்கள் அந்த நபரை கோழிகுஞ்சை அமுக்குவதுபோல் தரையோடு சேர்த்து அமுக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

முதுகில் மிதித்த நபரை போலீசார் இழுத்து சென்றாலும் அந்த நபரை கோபத்தில் முறைத்தபடியே சில நொடிகள் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தார் அர்னால்ட். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் இந்த வீடியோ உலகம் முழுவதும் நெட்டில் வைரலாக பரவியது. அர்னால்டை முதுகில் தாக்கிய நபர் யார்? எதற்காக தாக்கினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Arnold ,
× RELATED ஆட்டமிழந்த விரக்தியில் தங்கும்...