மலரும் நினைவில் எமி ஜாக்ஸன்...

பாய்பிரண்ட் ஜார்ஜ் பனயியோட்டோவுடன் சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட எமி ஜாக்ஸன் அதற்கு முன்பே கர்ப்பம் ஆகிவிட்டார். கர்ப்பம் ஆகிவிட்டதால் அதற்காக நடக்காமல், வேலை செய்யாமல் அம்மாடி... அப்பாடி என்று ஓய்ந்து ஒரு மூலையில் உட்கார்ந்துவிடாமல் வழக்கம் போல் ஜிம்மில் பயிற்சி செய்வதுடன், ஊர் ஊராக விமானத்தில் பறக்கிறார் எமி. நடையிலும் தளர்ச்சி காட்டாமல் விறுவிறுப்பு காட்டுகிறார்.

சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றவர் அங்குள்ள சாலையில் நடந்து செல்லும் புகைப் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இதில் விஷேசம் என்னவென்றால், சில வருடங்களுக்கு முன் அவர் அங்குள்ள ஒரு அழகு கிரீம் விளம்பரத்துக்கு போஸ் தந்திருந்தார். அந்த படம் ஒட்டப்பட்டிருந்த கார் முன்பு நடந்து சென்ற காட்சியைத்தான் புகைப்படமாக வெளியிட்டு மலரும் நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்.

× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...