கும்புட்றேன் சாமியோவ்....! ரப்பராக வளையும் அமலாபால்

அமலாபால் எப்படி தனது உடற்கட்டை ஸ்லிம்மாக நச்சென்று வைத்திருக்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் தினமும் ெசய்யும் யோகா பயிற்சிதான் என்கிறார். அவ்வப்போது ஒரு சில யோகாசனங்கள் செய்வதை படமாக வெளியிட்டு வந்த அமலாபால் தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத் தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

கும்புட்றேன் சாமியோவ் என்பதுபோல் போஸ் தந்திருக்கும் அமலா, ’இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயரே கூப்பி நமஸ்தே சொல்கிறேன்’ என பதிவிட்டிருக்கிறார். ஒற்றைக் கால் ஆசனம், மல்லாக்கப்படுத்து கால்களையும் முதுகையும் உயரே நிறுத்தியபடியான ஆசனம் என வெவ்வேறு போஸ்களை தந்திருக்கும் அமலாபாலின் பயிற்சிகளை கண்ட ரசிகர்கள், ‘உங்கள் உடல் ரப்பர்போல் வளைகிறதே’ என ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.

Related Stories: