×

நாய் பிடிக்க போயி பேயை பிடித்து வந்த கதை

தனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பைக் கதை உள்பட பல படங்களுக்கு எடிட்டிங் செய்த கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் ரேவதி ரங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் படம், நாயே பேயே. ஒரு குப்பைக் கதை படத்தில் நடித்த நடன இயக்குனர் தினேஷ், ஐஸ்வர்யா, ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு, நிரன் சந்தர். இசை, என்.ஆர்.ரகுநந்தன். இயக்கம், சக்தி வாசன். ஒரு நாயை கடத்த முயற்சிக்கும் நான்கு பேர், தவறுதலாக பேயை கடத்துகின்றனர். பிறகு பேயிடம் சிக்கி தவிக்கும் அவர்களின் கதி என்ன என்பதை காமெடியுடன் படம் சொல்கிறது. சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது.

Tags : Boi Bay ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!