காலா, விஸ்வாசம் உள்பட பல படங்களில் நடித்தவர், சாக்ஷி அகர்வால். அவர் கூறுகையில், ‘முதல் முறையாக இரட்டை வேடங்களில் ராய்
லட்சுமி நடிக்கும் சின்ட்ரெல்லா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். பிறகு எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், நிகிஷா படேல், ஈஷா ரெப்பா நடிக்கும் காமெடி கலந்த ஹாரர் படம் ஒன்றில், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறேன்.