×

நெல்லை தமிழ் பேசும் சாக்‌ஷி

காலா, விஸ்வாசம் உள்பட பல படங்களில் நடித்தவர், சாக்‌ஷி அகர்வால். அவர் கூறுகையில், ‘முதல் முறையாக இரட்டை வேடங்களில் ராய்
லட்சுமி நடிக்கும் சின்ட்ரெல்லா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். பிறகு எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், நிகிஷா படேல், ஈஷா ரெப்பா நடிக்கும் காமெடி கலந்த ஹாரர் படம் ஒன்றில், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறேன்.

முதல்முதலாக பாவாடை, தாவணி அணிந்து நடித்தது மட்டுமின்றி, நெல்லை தமிழ் பேசி நடித்தது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அடுத்து திருமணம் எனும் நிக்காஹ் படத்தின் இயக்குனர் அனீஸ் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். அடிப்படையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதால், படத்தில் ஏற்கும் கேரக்டரின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தி நடித்து வருகிறேன்’ என்றார்.

Tags : Nellai Tamil ,Sakshi ,
× RELATED உலக நாடுகளில் ஆட்சி மொழியாக இருப்பது...