ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை ட்விட்; மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய்...

தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை நடிகை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு விவேக் ஓபராய் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு என்பது ஐஸ்வர்யா - சல்மான் கான் உறவு போன்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பானது ஐஸ்வர்யாவுக்கும் எனக்குமான உறவு போன்றது. இறுதியில் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இதுதான் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகான இறுதி முடிவு’’ என்று கூறியுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘‘தோல்வியடைந்தவரே, ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கை பற்றிய முட்டாள்தனமான ஜோக் இது’’ என்று நெஹர் என்பவர் பதிலடி கொடுத்துள்ளார். விவேக் ஓபராயின் இந்த அநாகரீகமான டிவீட் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய மீம்-ஐ நீக்கிவிட்ட விவேக் ஓபராய், ‘ஒருசிலரால் நகைச்சுவையாக பார்க்கக்கூடிய விஷயம் பிறரால் அப்படி பார்க்கப்படுவதில்லை.

நான் ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2000 பெண்களின் முன்னேற்றத்திற்காக உதவியிருக்கிறேன். எனினும், எனது பதிவு சிலரது மனதை புண்படுத்தியதாக அறிந்ததால் அந்த பதிவை நீக்கிவிட்டேன். மேலும் இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

Related Stories: