×

உருமாற்றம் செய்த மாதவன்...

அலைபாயுதே மாதவனுக்கு பெண் ரசிகைகள் அதிகம். அதனால் அதற்கேற்ப கதாபாத்திரங்களையே தேடித் தேடி நடித்தார். மேடி மேடி என்று ரசிகைகளும் மொய்த்தனர். ஒரு கட்டத்தில் ரொமான்ஸ் பாத்திரங்கள் கைவிட்டதால் தம்பி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் முரட்டுத்தன பாத்திரங்கள் ஏற்றார். மாறுபட்ட வேடங்களில் நடித்த மாதவன் தற்போது 77 வயது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை சரித்திர படத்தில் நடிப்பதுடன் இயக்குனர் பொறுப்பும் ஏற்றிருக்கிறார். அதற்காக கடந்த 2 வருடமாக நரைத்த தாடி, மீசையுடன் தவமாய் தவம் கிடந்து அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வயதான காட்சிகள் நடித்து முடித்த நிலையில் தற்போது கிளீன் ஷேவ் செய்து இளமை தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். நம்பியின் இளமை பருவ காட்சிகளில் நடிப்பதற்காக அவர் இப்படி உருமாறி உள்ளார். வயதான, இளமையான படங்களை வெளியிட்டிருக்கும் மாதவன்,’2 வருடங்களுக்கு பிறகு ஷேவ் செய்துள்ளேன். இளமையான நம்பி நாராயணன் பிரான்ஸுக்கு சென்று அங்கு வெற்றி பெற தயாராக இருக்கிறார்’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED பொன்மகள் வந்தாள் போலி வெப்சைட்டில் வெளியானது