ராசி கண்ணாவின் ரெக்கார்ட் பிரேக் ‘லிப் லாக்’

உதட்டு முத்தம் தருவதில் பல இளம் நடிகர்கள் கமலையும் மிஞ்சிவிட்டனர். இந்தி நடிகர் எம்ரான் ஹாஸ்மி நடிக்கும் எல்லா படத்திலும் லிப் லாக் காட்சிகள் இடம்பெறும். தற்போது அவரையே மிஞ்சும் அளவுக்கு ரெக் கார்ட் பிரேக் முத்தம் தர தயாராகிக்கொண்டிருக்கிறார் விஜய்தேவர கொண்டா.
நோட்டா படத்தில் நடித்த விஜய்தேவரகொண்டா அப்படத்தில் முத்த காட்சிக்கு முக்கியத்துவம் தராவிட்டாலும் அதற்கு முன் நடித்த, அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற தெலுங்கு படங்களில் தொடர்ச்சியாக உதட்டு முத்தம் தந்து ரசிகர்களை குளிர வைத்து வருகிறார். அடுத்து காந்தி மாதவ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய் தேவர கொண்டா.

ராசி கண்ணா ஹீரோயின். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை, ஆனால் இதில் இடம்பெற உள்ள உதட்டு முத்த காட்சியை தென்னிந்தியாவிலேயே அதிக நேரம் உதட்டு முத்தம் தரும் காட்சியாக பதிவு செய்து ரெக்கார்ட பிரேக் செய்ய திட்டமிட்டிருக்கும் இயக்குனர், அதற்கேற்ற காட்சியை உருவாக்க வியர்வை சிந்தி உழைத்துக்கொண்டிருக்கிறார். உதட்டு முத்தத்தில் என்ன ரெக்கார்ட் பிரேக்? என ரசிகர்கள் கமென்ட் பகிரத் தொடங்கி உள்ளனர்.

× RELATED நாய் கடித்த தகராறு இன்ஜினியர் மண்டை உடைப்பு