×

அட்ஜெஸ்ட் பண்றீங்களா....? தெறிக்க விட்ட நடிகை

மலையாள படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருக்கும் நடிகை சஜிதா மடதில், பெயருக்கு ஏற்றபடி ‘தில்’லாக காஸ்டிங் கவுச்சை தெறிக்க விட்ட சம்பவம் நடந்துள்ளது. உதவி இயக்குநர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கார்த்திக் என்பவர் சஜிதாவிடம் தொலைபேசியில் பேசினார். ‘தமிழ் படம் ஒன்றில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க முடியுமா? உங்களை பற்றிய விபரங்களை சொல்லுங்கள்’ என்று கேட்டார். ‘படம் தொடர்பான விவரத்தை இமெயில் அனுப்புமாறு கூறினார் சஜிதா. உடனே கார்த்திக், ‘நீங்கள் அட்ஜஸ்ட் பண்ண தயாரா?’ என்றார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சஜிதா அந்த நபரை போனிலேயே காய்ச்சி எடுத்தார்.

இதுபற்றி சஜிதா கூறும்போது, ‘என் வாழ்நாளில் யாரும் என்னை பட வாய்ப்புக் காக படுக்கைக்கு அழைத்தது இல்லை. நடிகைகளை மட்டும்தான் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்வீர்களா? இல்லை, நடிகர்களையுமா? என்று அந்த உதவி இயக்கு னரிடம் கேட்டேன், அந்த படத்தின் பெயர் சரியாக நினைவில் இல்லை’ என்றார். காஸ்டிங் கவுச்சுக்கு பாடம் கற்பிக்க எண்ணிய சஜிதா, அட்ஜஸ்ட் பண்ண தயாராக உள்ளவர்கள் இந்த உதவி இயக்குநரை அணுகலாம் என்று எழுதி அந்த நபரின் செல்போன் நம்பரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் கார்த்திக்கின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

Tags : actress ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...