×

ஆபாச மெசேஜ் அனுப்புற வயசா இது..

நடிகைகள் தங்களது புகைப்படங்கள், கருத்துக்களை நெட்டில் பகிர்ந்து வருகின்றனர். பல நடிகைகள் படுகவர்ச்சியான படங்களை பகிர்ந்தாலும் சில நடிகைகள் எல்லை மீறாத படங்களையே பகிர்கின்றனர். மல்லுவுட்டில் வரதன், மாயாநதி படங்களில் நடித்ததுடன் தற்போது பிரதர்ஸ் டே படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. பள்ளி சிறுவர்கள் சிலர் இவருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பினர். அதைக்கண்டு டென்ஷன் ஆனவர் அந்த மெசேஜையும், சீருடையுடன் இருக்கும் சிறுவர்களின் புகைப்படத்தையும் தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டு கண்டித்திருக்கிறார். ‘குறிப்பிட்ட சிறுவர்கள் எனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி உள்ளனர். இது போன்ற அசிங்கமான மெசேஜ்களை கண்டு நான் விலகி செல்ல முடியும். ஆனால் இந்த மெசேஜை சிறுவர்கள் அனுப்பியதுதான் எனக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது’ என தெரிவித்திருக்கிறார்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!