மீண்டும் பள்ளிக்கு போகலாம்..

எண்பதுகள் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் பள்ளிக்கூடங்கள் கீற்றுகொட்டகையிலும், சீமை ஓட்டுக்கு கீழும் எப்படி இயங்கின. ஆசிரியர், மாணவர்கள் உறவு எப்படி இருந்தது போன்வற்றை பள்ளிக்கூடம் படத்தில் துல்லியமாக படம்பிடித்திருப்பார் இயக்குனர் தங்கர்பச்சான். அப்படத்தை பார்த்தவர்கள் மீண்டும் பழைய ஞாபகங்களில் திளைத்தனர். அதில் இடம்பெற்ற, ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்..’ என்ற பாடல் பலரது விழிகளை நனைத்தது. ஆனால் நிஜத்திலேயே ஒரு நடிகர் மறுபடியும் தான் படித்த பள்ளிக்கூட வகுப்புக்கு போயிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல.... நம்ம பிரகாஷ்ராஜ்தான். நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பெங்களூரு தொகுதியில் போட்டியிடுகிறார் பிரகாஷ்ராஜ். பள்ளிக்கூடம் ஒன்றில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டளித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது,’41 வருடத்துக்கு முன்பு எந்த வகுப்பறையில் உட்கார்ந்து படித்தேனோ அதே பள்ளிக்கூடத்தில் எனது வாக்கை பதிவு செய்தேன். மறக்க முடியாத பழைய நினைவுகளுடன், புதிய பயணம்...’ என தெரிவித்திருக்கிறார்.

× RELATED ஸ்கூல் பேக்கில் புகையிலை பாக்கெட்,...