×

கலன்க் (இந்தி)

1946ல் நடக்கும் கதை இது. லாகூருக்கு அருகே உள்ள ஹுஸ்னாபாத்தில் கதை நடக்கிறது. வருண் தவன், எந்தக் கவலையும் இல்லாத வாலிபன். காளைகளுடன் மோதும் விளையாட்டில் எப்போதும் ஜெயிப்பவர். அலியா பட், அந்த ஊரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். காத்தாடி விடுவதும், பிறரது காத்தாடிகளை பிடிப்பதுமாக சந்தோஷப் பறவை போல் இருக்கிறார். அந்த ஊரில் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ஆதித்ய ராய் கபூர். அவரது மனைவி சோனாக்‌ஷி சின்ஹா, நோயால் அவதிப்படு கிறார். தனது கணவருக்கு அலியா பட்டை இரண்டாவது திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். திருமணமாகாத 2 சகோதரிகள் இருப்பதாலும், தந்தை பொறுப்பு இல்லாதவராக இருப்பதாலும், அலியா இதற்கு சம்மதிக்கிறார். ஆனால், ஒரு நிபந்தனையை விதிக்கிறார். அதாவது, பாடுவதில் பிரபலமான மாதுரி தீட்சித்திடம் தானும் சேர்ந்து பாட பயிற்சி பெற விரும்புகிறார். இப்படி ஒவ்வொரு கேரக்டரின் கதையை வைத்து, ஒட்டுமொத்தமாக ஒரு கதையை எழுதி இருக்கிறார்கள்.

படம் தொடங்கி 15 நிமிடத்துக்குள் கேரக்டர்களில் ஏற்படும் குழப்பம், இடைவேளை வரை நீடிக்கிறது. ஏகப்பட்ட நட்சத்திரங் களை நடிக்க வைத்திருப்பதால், அந்த கேரக்டர்களை விரிவாக விளக்க கதாசிரியர் தவறிவிட்டது தெரிகிறது. மாதுரி தீட்சித்தின் கணவராக சஞ்சய் தத் நடித்து இருக்கிறார். கதையில் அவரது கேரக்டர் மிகப் பெரிய புதிராக அமைந்து இருக்கிறது. எதற்காக அவர் படத்தில் வருகிறார் என்பது இயக்குனருக்கே வெளிச்சம். இப்படத்தின் கதையில் எந்த புதுமையும் கிடையாது. கதை நடக்கும் காலக்கட்டத்தில் வந்த கதை போலவே படம் இருக்கிறது. ரசிகர்களை மேலும் இம்சைகள் செய்வது, படத்தின் வசனங்கள்தான். பழைய இந்திப் படங்களில் கேட்டு சலித்துப்போன போதனை வசனங்களும், ஏழை-பணக்கார பாகுபாடு பற்றி சொல்லுகின்ற வசனங்களும் கடும் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. 2 ஸ்டேட்ஸ் போன்ற கிளாசிக் படம் தந்த டைரக்டர் அபிஷேக் வர்மனிடம் ரசிகர்கள் நிறையவே எதிர்பார்த்தனர். ஆனால், மல்டி ஸ்டாரை வைத்து படம் வீணாக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!