ஜார்கண்ட் ஸ்டார்

இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நந்தன் சுப்பராயன் இயக்கும் படம் மயூரன். இதுபற்றி அவர் கூறும்போது,’ஒரு சில மாணவர் விடுதியில் சட்டவிரோத மாக கடத்தல், போதை பொருள் நடமாட்டம். கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் நடக்கிறது. மயூரன் என்றால் விரைந்து காக்க வரு பவன் என்று பொருள். என்னுடன் படித்த சக மாணவர்கள் இன்றைக்கு வெவ்வேறு பணிகளில் உள்ளனர். அவர்கள் இணைந்து இப்படத்தை தயாரிக் கின்றனர். கைலாஷ், பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், அமுதவாணன், அஸ்மிதா, வேல ராமமூர்த்தி, முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லனாக நடிக்க வட நாட்டு வாலிபர் தேவைப்பட்டதால் ஆடிஷன் வைத்தோம். ஜார்க்கண்ட் வாலிபர் பங்கேற்று போதை மருந்து பயன்படுத்துபவர்போல் நடித்தார். அதே பாத்திரத்தை அவருக்கு வழங்கிவிட்டோம். பரமேஷ்வர் ஒளிப்பதிவு. ஜுபின், ஜெரார்ட் இசை. சிதம்பரம், புதுச்சேரி, கேஜிஎஃப், சென்னையில் ஷூட்டிங் நடந்துள்ளது’ என்றார்.

Related Stories: