×

நடிகை ஷூ லேஸ் கட்டிவிட்ட கணவர்

கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று மனைவியிடம் கோபித்துக்கொள்ளும் கணவன்மார்கள் நிறையபேர் உண்டு. பொது இடத்தில் மனைவியின் ஷூ லேசை கட்டிவிட்ட நடிகருக்கு பாராட்டு குவிகிறது. தனுஷ் ஜோடியாக ராஞ்சனா இந்தி படத்தில் நடித்தவர் சோனம் கபூர். தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கணவருடன் ஜோடியாக வந்தார் சோனம். இருவரும், ஒரே மாடலில் ஷூ அணிந்து வந்தனர். அவர்களை ரசிகர் கூட்டம் சூழ்ந்துகொண்டது. அந்த நேரத்தில் சோனம் கபூரின் ஷூ லேஸ் அவிழ்ந்து விட, அவர் நடக்க சிரமப்பட்டார். அதை கவனித்த கணவர், பொது இடம் என்றும் பார்க்காமல், கீழே அமர்ந்து சோனமின் ஷூ லேசை ஆனந்த் கட்டி விட்டார். அந்த புகைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags : Actress ,housewife ,Shay Lace ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...