முத்தம் ஒன்று... சத்தமின்றி...

ஹீரோயின்கள் வீட்டுக்குள் செல்ல பிராணிகளுக்கும் சத்தமின்றி முத்தம் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் அமலாபால் உள்ளிட்ட சில ஹீரோயின்கள் தங்களின் செல்லப்பிராணிகைளை கட்டிப்பிடித்து கொஞ்சி உதட்டு முத்தம் தந்த படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டனர். அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் மற்றொரு ஹீரோயின். நட்பதிகாரம் 79 படத்தில் நடித்திருப்பவர் தேஜஸ்வி மடிவாடா.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரது இமேஜ் டேமேஜ் ஆக்கப்பட்டதால் நொந்து போயிருந்தார் தேஜஸ்வி. தெலுங்கு படங்களில் இவர் பிஸி நடிகையாக வருடத்துக்கு அரை டஜன் படங்கள் நடித்து வந்தார். ஆனால் கடந்த ஆண்டு ஒரு படம் கூட தேடி வரவில்லை. கவர்ச்சியாலும், நடிப்பாலும் தனது இமேஜை வளர்த்து வைத்திருந்த தேஜஸ்வி டிவி நிகழ்ச்சி ஒன்றில் வில்லி ரேஞ்சுக்கு சித்தரிக்கப்பட்டதில் அப்செட் ஆனார்.

பட வாய்ப்பு இல்லாததால் வெப் சீரியலுக்கு கால்ஷீட் ஒதுக்கினார்.  தன் மீதான நெகடிவ் இமேஜை பாசிடிவ் இமேஜாக மாற்ற போராடி வரும் தேஜஸ்விக்கு செல்ல நாய்க்குட்டிதான் ஆறுதலாக இருக்கிறதாம். அதனுடன் விளையாடி டென்ஷனை குறைக்கும் அவர் அதற்கு உதட்டு முத்தம் தரும் படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை இலகுவாக்கி வருகிறார்.

× RELATED ஊடகம் மூலமாக யாரும் சொந்த கருத்து...