என்னைப்போல் நடிக்க முடியாது; ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஓபன் டாக்

ஒரு மொழியில் ஹிட்டான படம் வேறு மொழியில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான படம் யு டர்ன். ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் இவன் தந்திரன், விக்ரம் வேதா படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் யு டர்ன் படத்தை பார்த்தது முதல் அதை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்பது சமந்தாவின் ஆசையாக இருந்தது.

கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கில் யு டர்ன் ரீமேக் செய்யப்பட அதில் சமந்தா நடித்து பாராட்டும் அள்ளினார்.   சமந்தா நடித்த யு டர்ன் படம் பற்றி ஒரிஜினல் யு டர்னில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நறுக்கான கருத்து தெரிவித்திருக்கிறார். ‘நான் ரொம்பவே என்னைப்பற்றி அதிகம் எண்ணுவேன். யு டர்ன் பட ரீமேக்கை நான் முழுவதுமாக பார்க்க முயன்றேன்.

ஆனால் 30 நிமிடத் துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் நான் ஏற்றிருந்த ரட்சனா கதாபாத்திரத்தில் வேறுவொருவரை (சமந்தா) என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை’ என்றார்.  மனதில் பட்டதை வெளிப்படையாக ஷ்ரத்தா பேசினாலும் சமந்தா நடிப்பை அவர் ஏற்றுக்கொள்ளாத வகையில் தெரிவித்த கருத்து சமந்தாவின் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்படவில்லை.

× RELATED கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வேதிகா