ஓய்வுக்கு பிறகு ஸ்ருதிஹாசன் புதுமுடிவு

கிட்டதட்ட 2 வருஷமாக நடிப்பிலிருந்து ஓய்விலிருந்த ஸ்ருதி ஹாசன் மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி ஆக முடிவு செய்திருக்கிறார். கடைசியாக 2017ல் சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஸ்ருதி நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டாலும் திரையுலகின ருடன் தொடர்பிலேயே இருந்தார். ஒரு கட்டத்தில் லண்டன் காதலன் மைக்கேல் கோர்சேலை திருமணம் செய்துகொண்டு செட்டிலாவார் என்றுகூட பரபரப்பு எழுந்தது.

ஆனால் திருமணத்தில் பெரிய அளவில் உடன்பாடு காட்டாத நிலையிலிருக்கிறார் ஸ்ருதி. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போது நினைக்கிறேனோ அப்போது திருமணம் செய்துகொள்வேன் என திருமணம் பற்றிய முடிவையும் பளிச்சென தெரிவித்திருந்தார்.

ஸ்ருதிக்கு மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணமிருப்பதால் புதுபடங்கள் ஒப்புக்கொள்ளவிருக்கிறார். சீக்கிரமே தமிழ், தெலுங்கு படங் களில் நடிக்க உள்ளேன். எனது தந்தை கமல்ஹாசன் கட்சியில் சேர்வீர்களா என்கிறார்கள். அரசியலில் எனக்கு இப்போதைக்கு ஆர்வம் இல்லை. ஆனால் எனது தந்தை மக்கள் வாழ்வு வளம்பெறுவதற்காக தனது  கடின மான உழைப்பை தொடர்ந்து தருவார்’ என்றார்.

× RELATED போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்